முதல் முறையாக, ஆஸ்திரேலியாவின் நகர மேயராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிட்னி நகரில் உள்ள பாரமாட்டா மாநகர கவுன்சிலராக சமீர் பாண்டே இருந்து வந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், அந்நகரத்தின் துணை மேயராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும், மாநகரின் மேயராக தோனா டேவிஸ் என்பவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், மேயர் பதவி விலகியதை அடுத்து, சமீர் பாண்டே மேயராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். புதிய மேயரைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற கூட்டத்தில், சமீர் பாண்டேவை உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.