சீன ஆதரவாளரான முகமது முய்சு மாலத்தீவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றார். இவர் சீன ஆதரவாளர் ஆவார். இவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய ராணுவ படைகள் வெளியேற்றப்படும் என அறிவித்திருந்தார். தற்போது அடுத்த மாதம் முறைப்படி பதவி ஏற்க உள்ளார். அவர் அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் இந்திய வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள். மேலும் இது தூதரக வழிகள் மூலம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். அதிபராக பதவியேற்ற பிறகு முதல் நாளில் இந்தியாவிடம் தனது படைகளை அகற்றுமாறு கேட்கப்படும். இதுவே தனது முன்னுரிமைகளில் ஒன்று ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.