2026க்குள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தங்களை இறுதி செய்யும் இந்திய அரசு

September 1, 2025

இந்தியாவின் கடற்படை வலிமையை உயர்த்தும் நோக்கில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நிறுவனங்களுடன் இணைந்து 2 நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியாவின் ஆழ்கடல் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு 2026க்குள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 2 நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தங்களை இறுதி செய்யத் திட்டமிட்டுள்ளது. சீனாவின் கடற்படை வலிமை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பிரான்சின் “நேவல் குரூப்” நிறுவனத்துடன் இணைந்து ஸ்கார்பீன் […]

இந்தியாவின் கடற்படை வலிமையை உயர்த்தும் நோக்கில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நிறுவனங்களுடன் இணைந்து 2 நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தியாவின் ஆழ்கடல் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு 2026க்குள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 2 நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தங்களை இறுதி செய்யத் திட்டமிட்டுள்ளது. சீனாவின் கடற்படை வலிமை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பிரான்சின் “நேவல் குரூப்” நிறுவனத்துடன் இணைந்து ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன. அதேபோல், ஜெர்மனியின் “திஸன் குரூப்” நிறுவனத்துடன் இணைந்து ஸ்டெல்த் நீர்மூழ்கி கப்பல்களும் கட்டப்பட உள்ளன.

மேலும், ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்கள், மத்திய அரசின் கீழ் செயல்படும் மசகான் டாக் லிமிடெட் (MDL) மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளன. இந்த திட்டங்கள் நிறைவேறினால், இந்தியாவின் கடற்படை வலிமை பல மடங்கு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu