ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் கபடி அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று ஆண்கள் கபடி போட்டி லீக் ஆட்டத்தில் சீன தைபே அணியுடன் இந்திய அணி மோதியது.
இதில் இந்தியா 50 - 27 என்ற கணக்கில் சீன அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. நாளை பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி அரையிறுதி சுற்றில் விளையாட உள்ளது.