இந்தியாவில் HAL மற்றும் தெற்கு ரயில்வே உட்பட ஒப்பந்தங்களைப் பெற அமெரிக்க நிறுவனமான மூக் இங்க் (Moog Inc) இந்திய அதிகாரிகளுக்கு ரூ. 4.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
இந்தியாவில் HAL மற்றும் தெற்கு ரயில்வே உட்பட ஒப்பந்தங்களைப் பெற, அமெரிக்க நிறுவனமான மூக் இங்க் (Moog Inc) இந்திய அதிகாரிகளுக்கு ரூ. 4.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது. 2020-இல், மத்திய ரயில்வேக்கு மோஷன் கண்ட்ரோல் சிஸ்டம் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தை பெற மூக் நிறுவனம் இடைத்தரகரின் வழியாக 10% கமிஷன் வழங்கினது, அதன் பிறகு 2020 செப்டம்பர் மாதத்தில் அந்த நிறுவனமும் ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் சேர்ந்து அதற்கான ஒப்பந்தத்தை பெற்றது. மேலும், நவம்பர் 2021-ல் HAL-க்கு ரூ. 12 கோடி மதிப்புள்ள ஒப்பந்தமும் பெற்றது.இதற்கு எதிராக, அமெரிக்க பங்கு வர்த்தக ஆணையத்தில் நடந்த வழக்கில், மூக் இங்க் நிறுவனத்துக்கு ரூ.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை 3 மடங்காக (300%) செலுத்தியதால், அந்நிறுவனம் சட்ட நடவடிக்கையை தவிர்த்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான ஆரக்கள், இந்திய, UAE மற்றும் துருக்கி நாட்டின் அதிகாரிகளுக்கு ரூ.57 கோடி லஞ்சம் கொடுத்தது, இதற்காக ரூ.193 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.