டெல்லியில் இந்திய ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் பேட்மிட்டன் தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாத்வீக் ரங்கி ரெடி - சிராக் ஷெட்டி ஜோடி தென்கொரியாவின் ஹியுக் காங் - செயுங் ஜே சியோ ஜோடியை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டுகளில் இந்தியா 21 - 15 என விளையாட்டை கைப்பற்றியது. ஆனால் இரண்டாவது செட்டில் 11- 21 என்ற கணக்கில் இருந்தது. இறுதி செட்டில் 18-21 என ஆட்டத்தை இழந்தது. இதனால் இந்திய ஜோடி இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.