சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முக ரத்தினம் வெற்றி பெற்றுள்ளார்.
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் ஆறாண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இதனை அடுத்து கேபினட் மந்திரி பதவியில் இருந்த இந்த வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். அதிபர் ஹலிமா தான் மேற்கொண்டு போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், காச்சோங், டான்தின் லியான், தர்மன் ஆகிய மூவரிடையே அதிபர் தேர்தலுக்கான போட்டி நிலவியது. இவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முக ரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.