சிங்கப்பூர் அதிபராக தருமன் சண்முக ரத்னம் நாளை பதவி ஏற்க உள்ளார்.
சிங்கப்பூரில் செப்டம்பர் 1-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முக ரத்னம் போட்டியிட்டார்.இவர் 70.4 சதவீத ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக பதவி ஏற்க உள்ளார். பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. தர்மன் சண்முக ரத்னம் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதி மந்திரி, துணைப் பிரதமர் என பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.














