சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய ஜோடி திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த், தென்கொரியாவின் பாக் ஹா நா - லீ சோ ஹி ஜோடியுடன் மோதியது. அதில் 21-9,14-21,21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளது