நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில், இந்தியன் ரயில்வேயின் சரக்கு பரிவர்த்தனை, கடந்த வருடத்தின் மொத்த சரக்கு பரிவர்த்தனையை விட உயர்ந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம், ரயில்வேயின் சரக்கு பரிவர்த்தனை 903.16 MT ஆக இருந்தது. இது தற்போது 8% உயர்ந்து, 978.72 MT ஆக பதிவாகியுள்ளது. எனவே, சரக்கு பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் ரயில்வே வருவாய் 16% உயர்ந்து, 105905 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த வருடம், சரக்கு பரிவர்த்தனையின் ஒட்டுமொத்த வருவாய் 91127 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நவம்பர் மாதத்தில் மட்டும் 5% சரக்கு பரிவர்த்தனை உயர்வு எட்டப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வருட நவம்பர் மாதத்தில், 116.96 MT ஆக இருந்த சரக்கு பரிவர்த்தனை, இந்த வருட நவம்பர் மாதத்தில் 123.9 MT ஆக உயர்ந்துள்ளது. எனவே, ரயில்வே துறையின் வர்த்தக மேம்பாட்டு திட்டங்களில், இது மிக முக்கிய மைல்கல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.