டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தக நாளில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.69 புள்ளிகள் ஆக உள்ளது. இதுவே பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னர் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.6275 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு அறிவித்துள்ள வரிக்குறைப்புகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் எதிரொலியாக இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக பொருளாதாரத் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.