பங்குச்சந்தையில் தொடரும் சரிவு போக்கு

July 24, 2023

கடந்த வாரத்தில், தொடர்ந்து புதிய உச்சங்களை பதிவு செய்து வந்த இந்திய பங்குச்சந்தை, இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று, கடும் சரிவை பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து, இந்த வாரத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தை சரிவை பதிவு செய்துள்ளது. ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், ஐடிசி போன்ற நிறுவனங்களின் அண்மை அறிவிப்புகள் பங்குச் சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் […]

கடந்த வாரத்தில், தொடர்ந்து புதிய உச்சங்களை பதிவு செய்து வந்த இந்திய பங்குச்சந்தை, இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று, கடும் சரிவை பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து, இந்த வாரத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தை சரிவை பதிவு செய்துள்ளது. ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், ஐடிசி போன்ற நிறுவனங்களின் அண்மை அறிவிப்புகள் பங்குச் சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 299.48 புள்ளிகள் சரிந்து, 66384.78 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 72.65 புள்ளிகள் சரிந்து, 19672.35 புள்ளிகளாக உள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, எஸ்பிஐ லைஃப், இன்டஸ் இன்ட் வங்கி, டாக்டர் ரெட்டீஸ், மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ஐடிசி, ரிலையன்ஸ், கோட்டக் வங்கி, டெக் மஹிந்திரா, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu