இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் அல்லாமல் வெளிநாடுகளில் பதிவு

September 27, 2022

இந்தியாவில் தொடங்க வேண்டிய பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் பதிவு செய்து தொழிலைத் தொடங்கி வருகின்றன. குலோபள் ஸ்டார்ட் அப் எக்கோ சிஸ்டம் குறியீடு 2021-ன் கீழ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 20வது இடத்தில் உள்ளது. இ௫ப்பினும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கும் பலர் போர்ச்சுகல், மால்டா, துபாய், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அவற்றை பதிவு செய்கின்றனர். அதாவது இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான மதிப்பீட்டு விதிகள், தன்னிச்சையான வரி […]

இந்தியாவில் தொடங்க வேண்டிய பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் பதிவு செய்து தொழிலைத் தொடங்கி வருகின்றன.

குலோபள் ஸ்டார்ட் அப் எக்கோ சிஸ்டம் குறியீடு 2021-ன் கீழ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 20வது இடத்தில் உள்ளது. இ௫ப்பினும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கும் பலர் போர்ச்சுகல், மால்டா, துபாய், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அவற்றை பதிவு செய்கின்றனர். அதாவது இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான மதிப்பீட்டு விதிகள், தன்னிச்சையான வரி விதிகள் சர்ச்சைக்குரியதாக உள்ளன. சிங்கப்பூர் துபாய் போன்ற நாடுகளில் இந்த சிக்கல் இல்லை. தனிநபர் வரியும் குறைவு. அதே சமயம் ஸ்டார்ட்-அப்களுக்கு, சுலமான வணிகச் சூழல், மலிவான மூலதனம் மற்றும் எளிதான அணுகல் போன்றவையும் நிறுவனங்கள் வெளிநாடுகளில் பதிவு செய்ய முக்கிய காரணங்களாக உள்ளன.

Henley & Partners ன் தரவரிசைப்படி , கிரிப்டோ, நிதி சேவைகள் மற்றும் இணையதளம் சார்ந்த வணிக நிறுவனங்கள் போன்றவை அதிகளவில் சிங்கப்பூர் மற்றும் யூஏஇ- ல் பதிவு செய்யப்படுகின்றன. அதேபோல் தொழில்முனைவோருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அதிகாரம் இருப்பதால், இந்தியாவில் பலர் இங்கிலாந்து மற்றும் கனடாவில் தொடங்க விசாக்களுக்கு விண்ணப்பிப்பதும் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் பதிவு செய்து 2021 மற்றும் 2022-ம் ஆண்டு தொடங்கிய பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பை பெற்றுள்ளன. இதில் யூனிகார்ன் , Polygon, Amagi, CommerceIQ, Hasura, Fractal Analytics, BrowerStack, Chargebee, InnovAccer, MindTickle உள்ளிட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் அடங்கும்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu