இந்திய பங்குச்சந்தைகள் 7-வது நாளாக சரிவு

February 14, 2025

அமெரிக்க பொருளாதார கொள்கைகளும் சர்வதேச சந்தைகளின் நிலைமையும் பங்குச்சந்தைகளில் சரிவை ஏற்படுத்தின. இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக கடுமையான சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட நிலைமைகளால் பங்குச்சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐ.டி. மற்றும் வங்கி பங்குகளின் திடீர் விற்பனை மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் பங்குச்சந்தைகள் சீராக சறிந்தது. நேற்று காலை வர்த்தகத்தின் ஆரம்பத்தில் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தாலும், கடைசியில் சென்செக்ஸ் 32.11 புள்ளிகள் சரிந்து 76,138.97 […]

அமெரிக்க பொருளாதார கொள்கைகளும் சர்வதேச சந்தைகளின் நிலைமையும் பங்குச்சந்தைகளில் சரிவை ஏற்படுத்தின.

இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக கடுமையான சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட நிலைமைகளால் பங்குச்சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐ.டி. மற்றும் வங்கி பங்குகளின் திடீர் விற்பனை மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் பங்குச்சந்தைகள் சீராக சறிந்தது.

நேற்று காலை வர்த்தகத்தின் ஆரம்பத்தில் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தாலும், கடைசியில் சென்செக்ஸ் 32.11 புள்ளிகள் சரிந்து 76,138.97 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், நிப்டி 13.85 புள்ளிகள் சரிந்து 23,031.40 புள்ளிகளில் நிலைபெற்றது.இந்த திடீர் சரிவின் காரணமாக, இந்திய பங்குச்சந்தைகள் தற்போது தொடர்ந்து 7-வது நாளாக சரிவை அனுபவித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu