நாசா, சர்வதேச அளவில் ரோவர் சேலஞ்ச் போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் 2 இந்திய மாணவர் குழுக்களுக்கு விருது கிடைத்துள்ளது.
சர்வதேச அளவில் 72 குழுக்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாசாவின் ஹியூமன் எக்ஸ்ப்ளோரேஷன் ரோவர் சேலஞ்ச் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில், அமெரிக்க கல்வி நிறுவனங்கள் முதல் இடத்தை வென்றுள்ளன. அதே சமயத்தில், டெல்லி என் சி ஆர் பகுதியைச் சேர்ந்த KIET கல்வி குழுமம் ‘கிராஷ் அண்ட் பர்ன்’ என்ற விருதை வென்றுள்ளது. மேலும், மும்பையைச் சேர்ந்த Kanakia சர்வதேச பள்ளி, ‘ரூகி ஆப் தி இயர்’ என்ற விருதை வென்றுள்ளது. பரிசு வென்ற இந்திய மாணவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், எதிர்காலத்திற்கான புதுமையான கண்டுபிடிப்புகள் பலவற்றை மாணவர்கள் இந்த போட்டியில் சமர்ப்பித்ததாக நாசா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.














