நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருச்சியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இந்திய மாணவர் சங்கத்தினர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநாடு மாவட்ட தலைவர் சூர்யா தலைமை தாங்க, திருநகர் மாவட்ட தலைவர் வைரவளவன், மாவட்ட செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்பாட்டம் நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை சுட்டிக்காட்டியும், தேர்வை ரத்து செய்ய […]

திருச்சியில் இந்திய மாணவர் சங்கத்தினர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநாடு மாவட்ட தலைவர் சூர்யா தலைமை தாங்க, திருநகர் மாவட்ட தலைவர் வைரவளவன், மாவட்ட செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்பாட்டம் நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை சுட்டிக்காட்டியும், தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நடைபெற்றது. இவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சிலர் தப்பிக்க முயன்றனர். அதனை தொடர்ந்து பத்து நிமிடம் போராட்டத்திற்குப் பிறகு போலீசார் நான்கு மாணவிகள் உட்பட்ட 11 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu