இந்தியாவில் டாக்ஸி சேவை வழங்குவதில் ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம் புத்தாக்க நிறுவனமாக களமிறங்கி உள்ளது. தற்போது, இந்த நிறுவனம், ஊபர், ஓலா போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக, மின்சார வாகனங்களை டாக்ஸி சேவையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இது, இந்திய அரசின் ‘பசுமை எரிசக்தி’ நடவடிக்கையின் பகுதியாக நிகழ்த்தப்படும் மாற்றம் என சொல்லப்பட்டுள்ளது.
ஓலா, ஊபர் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு, தங்கள் செயல்முறைகளை முற்றிலுமாக மின்சார வாகனங்களுக்கு மாற்ற தாமதங்கள் ஆகும். அதற்குள்ளாக, ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம் சந்தையை கைப்பற்றும் நோக்கில், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்களுக்கு கடுமையான சவாலாக ப்ளூ ஸ்மார்ட் எழுந்துள்ளது.