உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - நாக் அவுட் சுற்றில் இந்திய அணிகள்

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நாக் அவுட் சுற்றில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் முன்னேறி உள்ளது. உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் தென்கொரியாவின் பூசன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தை சீனாவிடம் தோற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய மகளிர் அணி ஹங்கேரி மற்றும் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. பின்னர் இந்திய மகளிர் அணி தனது கடைசி லீக்காட்டத்தில் ஸ்பெயினுடன் […]

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நாக் அவுட் சுற்றில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் முன்னேறி உள்ளது.

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் தென்கொரியாவின் பூசன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தை சீனாவிடம் தோற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய மகளிர் அணி ஹங்கேரி மற்றும் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. பின்னர் இந்திய மகளிர் அணி தனது கடைசி லீக்காட்டத்தில் ஸ்பெயினுடன் மோதியதில் இரு ஒற்றையர் பிரிவு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் 1 இல் இரண்டாவது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியது.

அதேபோன்று ஆடவர் பிரிவில் இந்திய அணி நியூஸ்லாந்து அணியுடன் மோதியதில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றில் கால் பதித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆடவர் அணி குரூப்-3ல் மூன்றாவது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதே பிரிவில் தென்கொரியா முதல் இடத்திலும்,போலந்து இரண்டாவது இடமும் பிடித்து நாக் அவுட் சுற்றில் நுழைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu