மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவப்படை மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என மாலத்தீவு
அதிபர் கேட்டுக்கொண்டார்.
மாலத்தீவு அதிபர் மற்றும் சீன ஆதரவாளர் ஆன முகமது மொய்சு இந்திராவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து விடுகிறார். இவர் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவப்படை வெளியேற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இரண்டு நாடுகளும் பரஸ்பரமாக செயல்பட்டு தீர்வு காண ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களில் ஒன்றில் உள்ள ராணுவ வீரர்களை மார்ச் 10ஆம் தேதிக்குள் இந்திய அரசு திரும்ப பெறும். மற்ற இரண்டு தளங்களில் உள்ள ராணுவ வீரர்கள் மே 10ம் தேதிக்குள் திரும்ப பெறப்படுவார். இதை இரு தரப்பும் ஒப்பு கொண்டுள்ளதாகவும் உயர் மட்ட குழுவின் அடுத்த கூட்டம் மாலத்தீவு தலைநகர் மாலேயில் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் மாலத்தீவு வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.