இந்தியர்கள் திறமையானவர்கள், வளர்ச்சிக்கான திறன்கொண்டவர்கள் - புடின் பாராட்டு

November 5, 2022

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியர்கள் திறமையானவர்கள் என்றும் வளர்ச்சிக்கான திறன் கொண்டவர்கள் என்றும் பாராட்டினார். நவம்பர் 4 அன்று ரஷ்ய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய புடின், மாஸ்கோவின் நீண்டகால நட்பு நாடான இந்திய மக்களின் திறனைப் பற்றி உற்சாகமாக பேசினார். "இந்தியாவைப் பார்ப்போம்: உள்வளர்ச்சிக்கான உந்துதல் கொண்ட திறமையான மக்கள். இந்தியா நிச்சயமாக அதன் வளர்ச்சியின் அடிப்படையில் சிறந்த முன்னேற்றத்தை அடையும். எந்த சந்தேகமும் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் மக்கள் அங்கு […]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியர்கள் திறமையானவர்கள் என்றும் வளர்ச்சிக்கான திறன் கொண்டவர்கள் என்றும் பாராட்டினார்.

நவம்பர் 4 அன்று ரஷ்ய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய புடின், மாஸ்கோவின் நீண்டகால நட்பு நாடான இந்திய மக்களின் திறனைப் பற்றி உற்சாகமாக பேசினார். "இந்தியாவைப் பார்ப்போம்: உள்வளர்ச்சிக்கான உந்துதல் கொண்ட திறமையான மக்கள். இந்தியா நிச்சயமாக அதன் வளர்ச்சியின் அடிப்படையில் சிறந்த முன்னேற்றத்தை அடையும். எந்த சந்தேகமும் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் மக்கள் அங்கு உள்ளனர். எனவே அது சாத்தியம்," என்று அவர் கூறினார்.

கடந்த வாரம், புடின், இந்தியாவின் அரசியல் தலைமையைப் பற்றிக் கூறி, பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்காகப் பாராட்டினார். உலக விவகாரங்களில் புது தில்லியின் பங்கு வரும் நாட்களில் வளரும் என்றும், எதிர்காலம் இந்தியாவுக்கே சொந்தம் என்றும் குறிப்பிட்டார்.
உக்ரைனில் நிலவும் மோதலுக்கு மத்தியில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்த வாரம் மாஸ்கோவிற்கு பயணம் செய்யவுள்ள நிலையில், புடினின் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நவம்பர் 7-8 வரை இரண்டு நாள் ரஷ்யா பயணத்தின் போது, ஜெய்சங்கர் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். அதோடு இருதரப்பு உறவுகளின் முழு வரம்பையும் ஆய்வு செய்வார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu