ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கி தவித்த இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆறாவது நாளாக அங்கு போராட்டம் நடை பெற்று வரும் நிலையில் அங்கு பலர் பிணைய கைதிகளாக பிடிபட்டுள்ளனர். பலர் உயிரழந்து வருகின்றனர். அங்கு சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை அறிவித்தது. இதன் மூலம் இஸ்ரேலில் தவிர்த்த 212 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இன்று இந்தியா வந்தடைந்தனர்.