இந்தியாவின் அகில் ஷோரன் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார்

இந்தியாவின் அகில் ஷோரன், ஐஸ்வரி பிரதாப் சிங் ஆகியோர் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர். இந்தோனேசியாவில் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் ஆடவர் தனிநபர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அகில் ஷோரன் 586 புள்ளிகளுடன் ஆறாவது இடம் பிடித்தார். பின்னர் இறுதிச்சுற்றில் 460.2 புள்ளிகள் உடன் முதலிடம் பிடித்தார். அதேபோன்று ஐஸ்வரி பிரதாப் […]

இந்தியாவின் அகில் ஷோரன், ஐஸ்வரி பிரதாப் சிங் ஆகியோர் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

இந்தோனேசியாவில் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் ஆடவர் தனிநபர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அகில் ஷோரன் 586 புள்ளிகளுடன் ஆறாவது இடம் பிடித்தார். பின்னர் இறுதிச்சுற்றில் 460.2 புள்ளிகள் உடன் முதலிடம் பிடித்தார். அதேபோன்று ஐஸ்வரி பிரதாப் 588 புள்ளிகளுடன் மூன்றாமிடம் பிடித்தார். பின்னர் 459 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கம் வென்றார். மற்றொரு இந்தியரான ஸ்வப்னில் குசேலும் 584 புள்ளிகள் உடன் இறுதி சுற்று வந்தார். ஆனால் பதக்க வாய்ப்பை இழந்தார். அதனை தொடர்ந்து ஆடவர் அணிகள் பிரிவில் அகில் ஷோரன், ஐஸ்வரி பிரதாப் தோமர், சுவப்னில் கூட்டணி 1758 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். இந்தியா இப்போட்டியில் இதுவரை 10 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்களை வென்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu