நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஸ்டீல் ஏற்றுமதி 54% சரிவு

January 7, 2023

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பினிஷ்டு ஸ்டீல் ஏற்றுமதி 54.1% சரிவை சந்தித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த காலகட்டத்தில் இந்திய ஏற்றுமதி அளவு 4.74 மில்லியன் டன்களாக பதிவாகியுள்ளது. சர்வதேச சந்தையில் ஸ்டீல் நுகர்வு சரிந்ததாலும், ஏற்றுமதி வரியை இந்தியா ரத்து செய்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பினிஷ்டு ஸ்டீல் உற்பத்தி 5.7% அதிகரித்து, 87.9 மில்லியன் டன்களாக […]

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பினிஷ்டு ஸ்டீல் ஏற்றுமதி 54.1% சரிவை சந்தித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த காலகட்டத்தில் இந்திய ஏற்றுமதி அளவு 4.74 மில்லியன் டன்களாக பதிவாகியுள்ளது. சர்வதேச சந்தையில் ஸ்டீல் நுகர்வு சரிந்ததாலும், ஏற்றுமதி வரியை இந்தியா ரத்து செய்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பினிஷ்டு ஸ்டீல் உற்பத்தி 5.7% அதிகரித்து, 87.9 மில்லியன் டன்களாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், ஸ்டீல் நுகர்வு 11.5% உயர்ந்து, 85.5 மில்லியன் டன்களாக பதிவாகியுள்ளது. மேலும், இதே காலகட்டத்தில், இந்தியா 4.4 மில்லியன் டன் அளவில் பினிஷ்டு ஸ்டீல் இறக்குமதியில் ஈடுபட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 27.4% அதிகமாகும். மேலும், இந்தியாவின் ஸ்டீல் மூலப்பொருள் உற்பத்தி 5% உயர்ந்து, 92.5 மில்லியன் டன்களாக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu