இந்தியாவின் சந்திரா தொலைநோக்கி வால் நட்சத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது

January 12, 2023

Comet C / 2022 E3 (ZTF) என்ற வால் நட்சத்திரம், பிப்ரவரி மாதத்தில் பூமிக்கு மிக நெருக்கமாக வரவுள்ளது. இந்நிலையில், இதன் புகைப்படத்தை இந்தியாவின் ஹிமாலயன் சந்திரா தொலைநோக்கி வெளியிட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு நெருக்கமாக வரும் போது, சூரியனுக்கும் நெருக்கமாக வருகிறது. இதனால், நட்சத்திரத்தில் இருந்து அதிகமான பனி உருகி, நீளமான வால் போன்ற அமைப்பு உருவாகிறது. இந்நிலையில், Comet C / 2022 E3 (ZTF) என்ற வால் நட்சத்திரம், 50000 […]

Comet C / 2022 E3 (ZTF) என்ற வால் நட்சத்திரம், பிப்ரவரி மாதத்தில் பூமிக்கு மிக நெருக்கமாக வரவுள்ளது. இந்நிலையில், இதன் புகைப்படத்தை இந்தியாவின் ஹிமாலயன் சந்திரா தொலைநோக்கி வெளியிட்டுள்ளது.

இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு நெருக்கமாக வரும் போது, சூரியனுக்கும் நெருக்கமாக வருகிறது. இதனால், நட்சத்திரத்தில் இருந்து அதிகமான பனி உருகி, நீளமான வால் போன்ற அமைப்பு உருவாகிறது. இந்நிலையில், Comet C / 2022 E3 (ZTF) என்ற வால் நட்சத்திரம், 50000 வருடங்களுக்கு ஒரு முறை பூமிக்கு நெருக்கமாக வருகிறது. எனவே, இதற்கு முன்னதாக இந்த வால் நட்சத்திரம் பூமியில் தோன்றிய பொழுது நியாண்டர்தால்கள் பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, விரைவில் நடக்க உள்ள இந்த வால் நட்சத்திர நிகழ்வு வானியலாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நட்சத்திரம் இன்று சூரியனுக்கு மிக அருகில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வால் நட்சத்திரத்தின் புகைப்படத்தை லடாக்கில் உள்ள சந்திரா தொலை நோக்கி மூலம் வானியலாளர்கள் மார்க்கரிட்டா சபாநாவா, முல்சந்த் குரே மற்றும் பாலச்சந்திரா ஆகியோர் எடுத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu