இந்தியாவின் மே மாத நிலக்கரி உற்பத்தி 7.1% உயர்வு

June 2, 2023

கடந்த மே மாதத்தில், இந்தியாவின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 7.1% உயர்ந்துள்ளதாக நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில், இந்தியா, மொத்தமாக 76.26 மில்லியன் டன் அளவில் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. மேலும், 2024 ஆம் நிதயாண்டு கணக்கில், இதுவரை 149.41 மில்லியன் டன் அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், கடந்த மே மாதத்தில், 59.94 மில்லியன் டன் அளவில் நிலக்கரி […]

கடந்த மே மாதத்தில், இந்தியாவின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 7.1% உயர்ந்துள்ளதாக நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில், இந்தியா, மொத்தமாக 76.26 மில்லியன் டன் அளவில் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. மேலும், 2024 ஆம் நிதயாண்டு கணக்கில், இதுவரை 149.41 மில்லியன் டன் அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், கடந்த மே மாதத்தில், 59.94 மில்லியன் டன் அளவில் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இது, நிறுவனத்தின் முந்தைய ஆண்டு உற்பத்தியை விட 9.54% உயர்வாகும். மேலும், ஒட்டுமொத்தமாக, நிலக்கரி கையிருப்பு மற்றும் நிலக்கரி போக்குவரத்து ஆகியவை நிலையான செயல்பாடுகளை பதிவு செய்துள்ளதாக, நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu