இந்தியாவின் காபி ஏற்றுமதி 3312 கோடி

November 19, 2022

நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 3312 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, கடந்த 2013 - 14 ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவின் காபி ஏற்றுமதி 1657 கோடியாக பதிவாகி இருந்தது. அது நடப்பு நிதி ஆண்டில் இரு மடங்கு உயர்ந்து, 3312 கோடியாக உள்ளதாக […]

நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 3312 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2013 - 14 ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவின் காபி ஏற்றுமதி 1657 கோடியாக பதிவாகி இருந்தது. அது நடப்பு நிதி ஆண்டில் இரு மடங்கு உயர்ந்து, 3312 கோடியாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காபி ஏற்றுமதியில், ஆசிய கண்டத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய காபி இறக்குமதியாளர்களில் இத்தாலி,ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகள் முன்னணியில் உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu