கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி 6.7% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 15 மாதங்களில் பதிவாகும் குறைந்தபட்ச அளவாகும்.
கடந்த காலாண்டில், முதன்மை துறையில் 2.7% வளர்ச்சி பதிவாகியுள்ளது. வேளாண்மை துறையில் 2.0% ஆக வளர்ச்சி குறைந்துள்ளது. உற்பத்தி உள்ளிட்ட இரண்டாம் நிலைத்துறை 8.4% வளர்ச்சி அடைந்துள்ளது. மூன்றாம் நிலை துறையில் 7.2% ஆக வளர்ச்சி குறைந்துள்ளது. தனியார் நுகர்வு மற்றும் முதலீடு வளர்ச்சி ஆகியவை நேர்மறையாக அமைந்துள்ளன. கடந்த காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.1% அளவில் இருக்கும் என்று மத்திய ரிசர்வ் வங்கியும், 7.2% அளவில் இருக்கும் என்று மூடிஸ் நிறுவனமும் கணித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மென்மையான தொடக்கம் இருந்த போதும், நிகழாண்டு இறுதியில் வலுவான வளர்ச்சி பதிவாகும் என்று கூறப்படுகிறது. அதற்கான நேர்மறையான அறிகுறிகள் தென்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.