ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) தனது கணிப்பில் 2023ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7% என கணித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 2022-23 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் கணித்து அறிக்கை வெளியிட்டுள்ளது . அதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முந்தைய ஆண்டின் 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மேலும் இது குறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் தற்போது பணவீக்கம் மற்றும் பண நெருக்கடி அதிகமாக உள்ளது. இ௫ப்பினும் இந்தியாவின் பொருளாதாரம் 2022-23 முதல் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 13.5 சதவீதம் வளர்ச்சியடைந்தது. ஆனால் உயர்த்தப்பட்ட எண்ணெய் விலைகள், அத்தியாவசிய பொ௫ட்களின் விலை உயர்வு மற்றும் உலகளாவிய நிதி நெருக்கடி ஆகியவை காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, 2022 ம் நிதியாண்டில் 7 சதவீதமாகவும் , 2023 இல் 7.2 சதவிகிதம் ஆகவும் மாற்றப்பட்டது என ௯றப்பட்டது. இதேபோல் பூஜ்ஜிய கோவிட் நடவடிக்கை காரணமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2022ல் 5 சதவீதமாக இருந்தது. 2023 ல் 3.3 சதவீதம் உய௫ம் வாய்ப்புள்ளதாக வங்கி ௯றியது.