கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் கிராம பகுதிகளை காட்டிலும் நகரப் பகுதியில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது. நகரப் பகுதியில் 8.96 சதவீதமாகவும், கிராமப் பகுதிகளில் 7.55 சதவீதமாகவும் உள்ளது.
நவம்பர் மாதத்தில் அதிகமாக ஹரியாணாவில் 30.6 சதவீதம், ராஜஸ்தானில் 24.5 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 23.9 சதவீதம், பிஹாரில் 17.3 சதவீதம், திரிபுராவில் 14.5 சதவீதம் என இருந்துள்ளது. மேலும், சத்தீஸ்கரில் 0.1 சதவீதம், உத்தராகண்ட் 1.2 சதவீதம், ஓடிசாவில் 1.6 சதவீதம், கர்நாடகாவில் 1.8 சதவீதம், மேகாலாயா 2.1 சதவீதம் என்ற எண்ணிக்கையில் குறைவாக இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.