செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த பணவீக்கம் 10.7 சதவீதமாக குறைந்துள்ளது

October 14, 2022

இந்தியாவின் மொத்த பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.7 சதவீதமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் மாதத்தில், இது 12.41 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 18 மாதங்களாக, இந்தியாவின் மொத்த பணவீக்கம், இரட்டை இலக்கத்தில் நீடித்து வருகிறது. எனினும், செப்டம்பர் மாதத்தில், 18 மாதங்களின் குறைவான விகிதம் பதிவாகியுள்ளது சற்று ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. கச்சா எண்ணெய், எரிவாயு, ரசாயனப் பொருட்கள், உலோகங்கள், மின்சாரம், ஜவுளித்துறை, உணவு பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றில் […]

இந்தியாவின் மொத்த பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.7 சதவீதமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் மாதத்தில், இது 12.41 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 18 மாதங்களாக, இந்தியாவின் மொத்த பணவீக்கம், இரட்டை இலக்கத்தில் நீடித்து வருகிறது. எனினும், செப்டம்பர் மாதத்தில், 18 மாதங்களின் குறைவான விகிதம் பதிவாகியுள்ளது சற்று ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.

கச்சா எண்ணெய், எரிவாயு, ரசாயனப் பொருட்கள், உலோகங்கள், மின்சாரம், ஜவுளித்துறை, உணவு பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றில் ஏற்பட்ட விலை ஏற்றம் செப்டம்பர் மாத பணவீக்கத்தில் எதிரொலித்தது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் 12.37 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 11.03 சதவீதமாக குறைந்துள்ளது. அத்துடன், உற்பத்தி துறையில் 6.34 சதவீதம் வளர்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், எரிபொருள் மற்றும் மின்சாரத் துறையில் ஆகஸ்ட் மாதத்தில் 33.67 சதவீதமாக பதிவான மொத்த பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 32.61 சதவீதமாக குறைந்துள்ளது. அத்துடன், அத்தியாவசிய பொருட்களின் வளர்ச்சியும் 11. 73 சதவீதமாக பதிவாகியுள்ளது. அனைத்து துறைகளிலும் கமாடிட்டி விலைகள் குறைக்கப்பட்டதால், பணவீக்கம் சற்று குறைந்துள்ளதாக கேர் எட்ஜ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ரஜனி சின்ஹா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐ சி ஆர் ஏ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவில், அக்டோபர் மாதத்தில் பெய்துள்ள கனமழை காரணமாக அறுவடை பாதித்துள்ளது. இதனால், உணவு பணவீக்கம் பாதிப்படையும். ஆனாலும், மொத்த பணவீக்கம் 9 முதல் 10 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால், அக்டோபர் மாதத்தில், 18 மாதங்களுக்குப் பிறகு, ஒற்றை இலக்க பணவீக்கம் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.9 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. அத்துடன், செப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 7.4 சதவீதமாக பதிவானது. அதன் வழியாகவே மொத்த பணவீக்கம் 10.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu