இண்டிகோ விமான நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகேஷ் கங்குவால் ஆவார். அவர், தற்போது, கடுமையான நிதி சிக்கலில் இருக்கும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் பங்குகளை வாங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. பலதரப்பட்ட வாய்ப்புகளை தேடி வந்தது. இந்த நிலையில், ராகேஷ் கங்குவால் ஸ்பைஸ் ஸ்டேட் பங்குகளை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் பங்குகள் 20% வரை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. முன்னதாக, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகள், கடந்த 6 மாதத்தில் 3% வரை சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.














