இண்டிகோ விமான நிறுவனத்தின் வருமானத்துறை அதிகாரியும், முக்கிய வியூகங்களை வகுத்த தலைமை அதிகாரியுமான சஞ்சய் குமார், தனது பதவியில் இருந்து விலகி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சஞ்சய் குமார், கடந்த 2007 ஆம் ஆண்டு, இண்டிகோ நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக பொறுப்பேற்றார். பின்னர், 2018 வரை நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், ஏர் ஏசியா நிறுவனத்தின் இந்திய பிரிவில் பணியாற்ற இண்டிகோவில் இருந்து விலகினார். அதன் பின்னர், கடந்த 2020 ஜனவரி மாதம், மீண்டும் இண்டிகோ நிறுவனத்தில் இணைந்தார். இண்டிகோ நிறுவனத்தின், ‘சிலந்தி வலை’ போன்ற விமான பயண கட்டமைப்பை வடிவமைத்ததில் இவர் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர் பதவி விலகியதை அடுத்து, இண்டிகோ நிறுவனத்தின் சர்வதேச விற்பனை பிரிவின் தலைவரான வினய் மல்கோத்ரா, இவரது பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என கூறப்பட்டுள்ளது.














