இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடி தோல்வி அடைந்தனர்.
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தனிஷா க்ராஸ்டோ மற்றும் துருவ் கபிலா, மலேசியா ஜோடியுடன் இரண்டாவது சுற்றில் மோதின. இந்திய ஜோடி முதல் செட்டை 21-18 என வென்றது, ஆனால் மலேசிய ஜோடி அடுத்த இரு செட்களில் 21-15, 21-19 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இதனால் இந்திய ஜோடி தொடரிலிருந்து வெளியேறியது.