ரஷ்யா இந்தோனேஷியா இடையே விமான சேவை

June 28, 2024

இந்தோனேசியா ரஷ்யாவுக்கு நேரடியான விமானங்களை இயக்க முயற்சி செய்து வருகிறது. இந்தோனேசியா - ரஷ்யா இடையே கொரோனா தொற்று காரணமாக நேரடி விமானங்கள் இயக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் இதனை இயக்க மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகிறது. எனவே சுற்றுலா துறையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்தோனேசியா ரஷ்யாவுக்கு […]

இந்தோனேசியா ரஷ்யாவுக்கு நேரடியான விமானங்களை இயக்க முயற்சி செய்து வருகிறது.

இந்தோனேசியா - ரஷ்யா இடையே கொரோனா தொற்று காரணமாக நேரடி விமானங்கள் இயக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் இதனை இயக்க மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகிறது. எனவே சுற்றுலா துறையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே இந்தோனேசியா ரஷ்யாவுக்கு நேரடியான விமானங்களை இயக்க முயற்சி செய்து வருகிறது. அதற்கு ரஷ்யா சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு இரு நாடுகளிடையே நேரடி விமானம் மீண்டும் இயக்கப்படும் என்று இந்தோனேசியா சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாக்கா யூநோ கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu