இந்தோனேஷியா - அனாக் கிராகடோ எரிமலை வெடிப்பு

June 9, 2023

இந்தோனேசியாவில் உள்ள அனாக் கிராகடோ எரிமலை இன்று வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு காரணமாக, 3 கிலோ மீட்டர் உயரத்திற்கு புகை வெளியேறி வருகிறது. சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் இந்த புகை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை தொடர்ந்து துடிப்புடன் காணப்படுவதால், எரிமலையைச் சுற்றிய 5 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு, பொதுமக்கள் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1883 ஆம் ஆண்டு, வரலாற்றிலேயே மிக மோசமாக அறியப்படும் கிராகடோ எரிமலை […]

இந்தோனேசியாவில் உள்ள அனாக் கிராகடோ எரிமலை இன்று வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு காரணமாக, 3 கிலோ மீட்டர் உயரத்திற்கு புகை வெளியேறி வருகிறது. சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் இந்த புகை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை தொடர்ந்து துடிப்புடன் காணப்படுவதால், எரிமலையைச் சுற்றிய 5 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு, பொதுமக்கள் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1883 ஆம் ஆண்டு, வரலாற்றிலேயே மிக மோசமாக அறியப்படும் கிராகடோ எரிமலை வெடிப்பு இந்த பகுதியில் நடந்தது. அதன் பிறகு, கடல் மட்டத்திற்கு மேலே இந்த எரிமலை தீவு தென்பட்டு வருகிறது. கிராகடோ எரிமலையின் குழந்தை என்று அறியப்படும் அனாக் கிராகடோ எரிமலை, ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை பிரிக்கும் கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த எரிமலை தற்போது வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, இதுவரை பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu