இந்தோனேசியாவின் 8-ஆவது அதிபராக ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியுமான பிரபோவோ சுபியாந்தோ ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
இதற்கு முன்னர், 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் அவர் ஜோகோ விடோடோவுக்கு எதிராக போட்டியிட்டாலும், வெற்றி பெற முடியவில்லை. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் அவர் பெரும் வெற்றியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக வெளியுறவுத் துறை இணையமைச்சா் பபித்ரா மார்கரிட்டா பங்கேற்றார்.