தமிழகத்தில் 41200 கோடிக்கு தொழில் திட்டங்கள் - அதானி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

January 10, 2024

அதானி குழுமம் தமிழகத்தில் 41200 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் திட்டங்களை தொடங்க உள்ளது. இதற்காக, 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுடன் அதானி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில், அதானி போர்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி, சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், அதானி சிமெண்ட்ஸ் 3500 கோடி […]

அதானி குழுமம் தமிழகத்தில் 41200 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் திட்டங்களை தொடங்க உள்ளது. இதற்காக, 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுடன் அதானி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில், அதானி போர்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி, சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், அதானி சிமெண்ட்ஸ் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. அடுத்ததாக, பசுமை மின்சார உற்பத்தி தொடர்பாக, அதானி கிரீன் நிறுவனம் 24500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. குறிப்பாக, நீர் மின்சக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம், சுமார் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மூன்றாவதாக, தமிழ்நாட்டில் டேட்டா சென்டர் (உயர்தர தரவு மையம்) அமைக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. சுமார் 13200 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் தரவு மையத்தால் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, அதானி டோட்டல் கேஸ் 1568 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu