பிரபல சந்தை மதிப்பாய்வு நிறுவனமான மூடிஸ், பாகிஸ்தானின் பணவீக்க விகிதம் 33% ஆக உயரும் என்று கணித்துள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியிலேயே இந்த விகிதம் சராசரியாக எட்டப்படும் என்று தெரிவித்துள்ளது.
மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தானின் பொருளாதார நிலையை உயர்த்த சர்வதேச நாணய நிதியம் அளிக்கும் நிதி மட்டும் போதாது. அதற்கு சிறப்பான பொருளாதார திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், "பாகிஸ்தானின் பொருளாதாரப் பயணம் தொடர் சவால்களை சந்திக்க உள்ளது. அந்நாட்டின் பணவீக்கம் 2024 ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து உயரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.