மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 223 கனஅடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 13-வது நாளாக இன்றும் நீர்வரத்து விநாடிக்கு 1000 கனஅடியாக நீடித்தது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 235 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 223 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 96.94 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 96.24 அடியாக சரிந்துள்ளது