இன்போசிஸ் நிறுவனத்தின் இணை தோற்றுனர் எஸ் டி சிபுலால் ஆவார். அவரது குடும்பத்தினரிடம் கணிசமான அளவு இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் உள்ளன. தற்போது, அந்த பங்குகளில் சிலவற்றை அவர்கள் விற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.எஸ் டி சிபுலாலின் மகன் ஸ்ரேயஸ் சிபுலால் மற்றும் மருமகள் பைரவி மதுசூதன் சிபுலால் ஆகியோர் தங்களிடம் உள்ள இன்போசிஸ் பங்குகளை நேற்று விற்பனை செய்துள்ளனர். வெளிச்சந்தையில் அவர்கள் இந்த விற்பனையை மேற்கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 435 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரேயஸ் சிபுலால் 2370435 பங்குகளையும், பைரவி மதுசூதன் சிபுலால் 667924 பங்குகளையும் விற்றுள்ளனர். அவை முறையே 339.8 கோடி மற்றும் 95.71 கோடி ரூபாய் மதிப்புடையதாகும்.