இன்போசிஸ் நிறுவன பங்குகள் இன்று 3% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.
அண்மையில், இன்போசிஸ் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. ஏஐ சொலுஷன்ஸ் என்ற நிறுவனத்துடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாக பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் இன்போசிஸ் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 1.5 பில்லியன் டாலர்கள் என்பதால், இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கியமான ஒப்பந்தமாக இது கருதப்பட்டது. இந்த நிலையில், ஒப்பந்தம் முறிந்ததாக வெளியான செய்தியால், இன்று, இன்போசிஸ் பங்குகள் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. முந்தைய அமர்வில் உயர்ந்து காணப்பட்ட இன்போசிஸ் பங்குகள், இன்று 3% வரை சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1523 ரூபாய் ஆக இருந்தது.