இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ், ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 6212 கோடியாக உள்ளது. மேலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 7% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நிறுவனத்தின் ஒவ்வொரு பங்குக்கும் 18 ரூபாய் இடைக்கால டிவிடெண்ட் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.1% உயர்வாகும். இந்த அறிவிப்பு வெளியான காரணத்தால், இன்றைய பங்குச் சந்தையில், இன்போசிஸ் 2% வரை சரிந்து வர்த்தகமாகி வருகிறது.