இன்போசிஸ் - பிபி இடையே 1.5 பில்லியன் டாலர் ஒப்பந்தம்

May 17, 2023

இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், பிரிட்டனின் எரிசக்தி நிறுவனமான பிபி உடனான ஒப்பந்தத்தை வென்றுள்ளது. 1.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாக சொல்லப்பட்டுள்ளது. தற்போதைய சமயத்தில், சரிவு பாதையில் இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் பலன் அளிக்கும் என கருதப்படுகிறது. பிபி நிறுவனத்திற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கு இன்ஃபோசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு, இன்போசிஸ் நிறுவனம் மிகப்பெரிய […]

இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், பிரிட்டனின் எரிசக்தி நிறுவனமான பிபி உடனான ஒப்பந்தத்தை வென்றுள்ளது. 1.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாக சொல்லப்பட்டுள்ளது. தற்போதைய சமயத்தில், சரிவு பாதையில் இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் பலன் அளிக்கும் என கருதப்படுகிறது.

பிபி நிறுவனத்திற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கு இன்ஃபோசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு, இன்போசிஸ் நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அதற்கு பிறகு கையெழுத்தாகும் மிகப்பெரிய ஒப்பந்தமாக இது சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சளில் பாரெக், "இன்போசிஸ் நிறுவனத்திற்கு இது மிக முக்கிய மைல்கல்" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu