இன்போசிஸ் பங்கு மதிப்பு - கொரோனாவுக்கு பிறகு 11% சரிவு

April 17, 2023

கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் கடுமையாக சரிந்து வருகிறது. இன்றைய வர்த்தக நாளின் இடையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 1238.25 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது கடந்த 2020 மார்ச் மாத பங்கு மதிப்புடன் ஒப்பிடுகையில் 11% குறைவாகும். அதே வேளையில், கடந்த 5 ஆண்டுகளாக இன்போசிஸ் பங்கு விலை 2.5 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2018 ஏப்ரலில் ஒரு பங்கு 564 ரூபாய் ஆக பதிவான நிலையில், தற்போது […]

கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் கடுமையாக சரிந்து வருகிறது. இன்றைய வர்த்தக நாளின் இடையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 1238.25 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது கடந்த 2020 மார்ச் மாத பங்கு மதிப்புடன் ஒப்பிடுகையில் 11% குறைவாகும்.

அதே வேளையில், கடந்த 5 ஆண்டுகளாக இன்போசிஸ் பங்கு விலை 2.5 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2018 ஏப்ரலில் ஒரு பங்கு 564 ரூபாய் ஆக பதிவான நிலையில், தற்போது 1388 ரூபாயாக உள்ளது. மேலும், நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை படி, இன்போசிஸ் பங்கு விலை 1540 வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய வேலையை விட 25% உயர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், இன்போசிஸ் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை வெளிவந்தது. அதில், நிறுவனத்தின் வளர்ச்சி குறைவாக கணிக்கப்பட்டிருந்தது. இத்துடன் சேர்த்து, டி.சி.எஸ் நிறுவனத்தின் வளர்ச்சியும் குறைவாக அறிவிக்கப்பட்டதால், தகவல் தொழில் நுட்பத்துறை முதலீட்டாளர்கள் அச்சமடைந்தனர். அதன் விளைவாக பங்கு மதிப்பு சரிவடைந்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu