ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் போருக்கு தயாராகி வருகிறது

March 10, 2023

ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை அடுத்து ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் போருக்கு தயாராகி வருகிறது. கடற்படை கமாண்டர்களின் மாநாடு இந்த முறை புதிதாக சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது மிக்-29கே ரக போர் விமானமும், தேஜஸ்-எம் ரக விமானமும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்டன. இந்த கப்பலில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக்கூடிய ஹெலிகாப்டர்களும் உள்ளன. இந்த கப்பல் வரும் ஆண்டுகளில் இந்தோ-பசிபிக் கடல் […]

ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை அடுத்து ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் போருக்கு தயாராகி வருகிறது.

கடற்படை கமாண்டர்களின் மாநாடு இந்த முறை புதிதாக சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது மிக்-29கே ரக போர் விமானமும், தேஜஸ்-எம் ரக விமானமும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்டன. இந்த கப்பலில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக்கூடிய ஹெலிகாப்டர்களும் உள்ளன. இந்த கப்பல் வரும் ஆண்டுகளில் இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தவுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை போருக்கு தயாராக்கும் பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு இறுதியில் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் போருக்கு முழு அளவில் தயாராகிவிடும். அதேபோல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பலில் 15 மாத கால பழுது பார்க்கும் பணிகள் நிறைவடைந்து வரும் 31-ம் தேதி கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் இதில் போர் விமானங்களை தரையிறக்கி ஏற்றும் பரிசோதனைகள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu