மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்து அறிவிப்பை வெளியிடும்.
மத்திய அரசு மற்றும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளில் அளிக்கப்படும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மூன்றாண்டு டைம் டெபாசிட் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டங்களான இரு சேமிப்பு திட்டங்களுக்கும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதில் மூன்றாவது டைம் டெபாசிட் திட்டத்திற்கு ரூபாய் 7.10 சதவீதமாகவும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கு வட்டி ரூபாய் 8.20 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.