சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு 0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்எஸ்சி) திட்டத்திற்கான வட்டி 7 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 7.2 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் முதிர்வு காலம் 120 மாதத்தில் இருந்து 115 மாதமாக குறைந்துள்ளது.