சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை விதித்து பாட்னாஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்த நிலையில் தற்போது 2-வது கட்ட பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, 'சமத்துவத்துக்கான இளைஞர்கள்' என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறப்பட்டிருந்தது. அப்போது நீதிபதிகள் பாட்னா உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
மேலும் அந்த மனுவை தாக்கல் செய்த 3 நாட்களுக்குள் பரிசீலித்து, முடிவு செய்யுமாறு பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, பாட்னா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.