கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆவினில் 12 வகையான கேக் அறிமுகம்

December 15, 2022

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் 12 வகையான கேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு முன்னிட்டு ஆவினில் 12 வகையான கேக்குகள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நவீன ஆவின் பாலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பிளாக் பாரஸ்ட் கேக், சாக்கோ ட்ரிபில்,ஸ்ட்ராபெரி கேக், பைனாப்பிள் கேக்,ஒயிட் ஃபாரஸ்ட் கேக், பட்டர்ஸ்காட்ச் கேக், ரெயின்போ கேக், பிளாக்கரண்ட் கேக், ரெட் வெல்வெட் கேக் […]

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் 12 வகையான கேக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு முன்னிட்டு ஆவினில் 12 வகையான கேக்குகள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நவீன ஆவின் பாலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பிளாக் பாரஸ்ட் கேக், சாக்கோ ட்ரிபில்,ஸ்ட்ராபெரி கேக், பைனாப்பிள் கேக்,ஒயிட் ஃபாரஸ்ட் கேக், பட்டர்ஸ்காட்ச் கேக், ரெயின்போ கேக், பிளாக்கரண்ட் கேக், ரெட் வெல்வெட் கேக் ஆகிய வகைகளில் கேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவை 800 கிராம், 400 கிராம் மற்றும் 80 கிராம் அளவுகளில் ஆவின் பாலகங்களில் விற்கப்படும்.

ஆவின் கேக்குகள் விலை மற்ற நிறுவனங்களின் விலையை விடக் குறைவாக இருக்கும். கேக் வகைகளின் விலை குறைந்தபட்சம் ரூ.70 முதல் அதிகபட்சமாக ரூ.800 வரை உள்ளது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu