4 ஆண்டு ஹானர்ஸ் பட்டம் அறிமுகம்

December 13, 2022

4 ஆண்டு ஹானர்ஸ் பட்டபடிப்பை பல்கலைக்கழக மானிய குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்கலைக் கழக மானிய குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து பாடப்பிரிவுகளிலும் 4 ஆண்டு ஹானர்ஸ் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் 160 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஹானர்ஸ் பட்டம் மற்றும் ஆராய்ச்சியுடன் கூடிய ஹானர்ஸ் பட்டம் வழங்கப்படும். முதல் 6 செமஸ்டர்களில் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்கள் ஆய்வு படிப்பை மேற்கொள்ள விரும்பினால், 4வது ஆண்டில் சேரலாம். அவர்களுக்கு இளங்கலை ஹானர்ஸ் […]

4 ஆண்டு ஹானர்ஸ் பட்டபடிப்பை பல்கலைக்கழக மானிய குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக் கழக மானிய குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து பாடப்பிரிவுகளிலும் 4 ஆண்டு ஹானர்ஸ் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் 160 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஹானர்ஸ் பட்டம் மற்றும் ஆராய்ச்சியுடன் கூடிய ஹானர்ஸ் பட்டம் வழங்கப்படும். முதல் 6 செமஸ்டர்களில் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்கள் ஆய்வு படிப்பை மேற்கொள்ள விரும்பினால், 4வது ஆண்டில் சேரலாம். அவர்களுக்கு இளங்கலை ஹானர்ஸ் பட்டம் வழங்கப்படும்.

இளங்கலை படிப்பில் 40 மதிப்பெண்களுடன் முதலாம் ஆண்டில் படிப்பை நிறுத்த விரும்பும் மாணவர்கள் , 80 மதிப்பெண்களுடன் 2வது ஆண்டில் படிப்பை நிறுத்த விரும்பும் மாணவர்கள் கோடை விடுமுறையில் கூடுதலாக 4 மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு தொழிற்கல்வி படிப்பை முடித்திருந்தால், அவர்கள் 3 ஆண்டிற்குள் மீண்டும் சேர்ந்து 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu